200 ஷேர்கள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், தாணு கேட்ட கேள்வி குறித்தும் பேசியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்
தமிழ்த் திரையுலகில் சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுத்து, புதிதாக ஒரு படம் தொடங்கப்படவுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவ கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இந்தப் படம் தயாராகிறது.
இந்தப் படத்தின் முதலீடு 2 கோடி ரூபாய் தான். இந்த 2 கோடி ரூபாயுமே 200 ஷேர்களாக பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது கூட்டுத் தயாரிப்பாக இந்தப் படத்தை திட்டமிட்டார்கள். இதனை திருப்பூர் சுப்பிரமணியம் – பிரமிட் நடராஜன் – ஆர்.பி.செளத்ரி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே 200 ஷேர்களையும் தாண்டி விற்பனையாகியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“புதிய முயற்சி பண்ணலாமே என்று பிரமிட் நடராஜன் சார் என்னிடம் கேட்டவுடன், செளத்ரி சாரிடம் சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு முதல் நன்றி. பின்பு கே.எஸ்.ரவிகுமார், சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கும் நன்றி. அந்த சதவீத அடிப்படையில் சம்பளம் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தேன்.
அந்த ஆடியோ வெளியிட்டவுடனே பலரும் எனக்கு வாட்ஸ்-அப் வாயிலாக ஷேர்களை உறுதி செய்தார்கள். அவர்களுடைய பட்டியலை வெளியிட்டுள்ளேன். சில பேரை இதில் சேர்க்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் பெயர் சொல்றோம். அந்தப் பெயரில் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதில் ஒரு 35 ஷேர் வரை உறுதியாகியுள்ளது. மொத்தமாக 235 ஷேர் வரை உறுதியாகிவிட்டது. உறுதியாகிவிட்ட ஷேர்களில் யார் வரவில்லை என்றாலும் நானும், செளத்ரி சாரும் எடுத்துக் கொள்ளப் போகிறோம்.
இந்தக் கூட்டு முயற்சி சினிமாவுக்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். படமெடுக்காமல் இருக்கும் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். நேற்று மாலை 6 மணியளவில் தாணு எனக்கு தொலைபேசியில் அழைத்து, 200 ஷேரையும் நானே வாங்கிக் கொள்கிறேன். அதில் வரும் லாபத்தை நலிந்த தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார். அவருடைய நல்ல மனது நான் பாராட்டுகிறேன். ஆனால், அவர் போன் பண்ணுவதற்கு முன்பே, இந்த ஷேர்கள் அனைத்துமே முடிந்துவிட்டது.
பின்பு சிவா, கமீலா நாசர், பாபு கணேஷ், கேயார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்காகச் செய்து கொடுத்திருக்கலாமே என்று சொன்னார்கள். இதில் ஷேர்கள் வாங்கியிருப்பவர்கள் அனைவருமே தயாரிப்பாளர்கள் தான்.
இப்போது இருக்கும் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஜாம்பவான் என்றால் அது தாணு தான். அவரிடம் தான் பெரிய நடிகர்களின் கால்ஷீட் எல்லாமே இருக்கிறது. இந்தப் படத்துக்காக ஒரு மாதமாக ப்ளான் பண்ணி, அனைவருக்குமே வாக்குறுதி கொடுத்தாகிவிட்டது. நடிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்பு வட்டத்தில் இருப்பவர் தாணு. அவர் நலிந்த தயாரிப்பாளர்களுக்காக என்று எந்த நடிகரை வேண்டுமானாலும் சம்பளம் இல்லாமல் நடிக்க வைக்க முடியும்.
சம்பளம் இல்லாமல் என்று கூட வேண்டாம். சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்கும் ஒரு இயக்குநர், ஒரு நடிகை மட்டும் தாருங்கள். இதே மாதிரி ஒரு கூட்டுத் தயாரிப்பு செய்து, நீங்கள் பெரிய நடிகரை தான் தருவீர்கள். அப்படியிருக்கும் போது பிரம்மாண்டமாக தயாரிப்பாகத் தான் செய்ய வேண்டும். அந்தப் படத்தில் வரும் லாபத்தை அப்படியே நலிந்த தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கலாம். இது தொடர்பாக செளத்ரி சாரிடம் பேசிவிட்டேன். அதற்கு நாங்கள் தயார்.
அந்தப் படத்தின் முதலீட்டை நீங்களே கொடுத்துவிட்டால், லாபத்தை அப்படியே தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொடுத்துவிடுகிறோம். ஒரு வேளை அந்தப் படத்துக்கு நீங்கள் முதலீடு செய்ய தயாராக இல்லை என்றால், க்ரவுட் பண்டிங் முறையில் தயாரித்து, 50% லாபம் முதலீட்டாளர்களுக்கும், 50% லாபம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்க தயாராகவுள்ளோம். நீங்கள் செய்து கொடுக்க ஒரே வேலை சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்கும் ஒரு இயக்குநர், ஒரு நடிகர் கொடுப்பது மட்டுமே. முதலீடு எப்படிச் செய்யலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு படம் நாங்கள் முன்னின்று செய்து தருகிறோம். தேதி வாங்கி தருவது மட்டும் தாணு, டி.சிவா, கமீலா நாசர், கேயார் உள்ளிட்டோர் முடிவு செய்யுங்கள்”
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.200 ஷேர்கள் வாங்கியுள்ள பட்டியலை திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
ஒருங்கிணைப்பு: திரு. பிரமிட் நடராஜன்
கதை: வெங்கட் சுபா
இயக்குநர்: கே.எஸ்.ரவிக்குமார்
நடிகர்கள்:
சத்யராஜ்
விஜய் சேதுபதி
பார்த்திபன்
படத்தயாரிப்பின் பங்குதாரர்களாக ஆர்வத்தோடு முன்வந்திருப்பவர்கள்:
1. சூப்பர் குட் பிலிம்ஸ் – 10 ஷேர்
2. சக்தி பிலிம்ஸ் – 10
3. பிரமிட் நடராஜன் – 10
4. கேபி பிலிம்ஸ் பாலு – 10
5. எல் எம் எம் முரளி – 10
6. காளையப்பன் – 10
7. திருச்சி ரவி சாந்தி பிலிம்ஸ் – 10
8. திருநெல்வேலி மணிகண்டன் – 10
9. தயாரிப்பாளர் விஜயகுமார் – 10
10. தயாரிப்பாளர் ஊட்டி முருகன் – 10
11. ராக்லைன் வெங்கடேஷ் – 10
12. டி எம் சி இளங்கோ சேலம் – 10
13. ஏ ஒன் பட தயாரிப்பாளர் டாக்டர் – 10
14. ராம்நாடு ராமச்சந்திரன் தயாரிப்பாளர் – 10
15. தயாரிப்பாளர் கே ராஜன் – 5
16. திருநெல்வேலி ராம் முத்துராம் லீஸ் பார்ட்டி – 5
17. தஞ்சாவூர் முத்தலிப் – 5
18. அகட விகடம் பாஸ்கர் ராஜ் – 5
19. திருமணம் படத்தயாரிப்பாளர் – 5
20. பாண்டிச்சேரி சுந்தர் விநியோகஸ்தர் – 5
21. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் – 5
22. நடிகர் உதயா குடும்பம் – 5
23. முருகராஜ் தயாரிப்பாளர் – 5
24. நடிகை சத்யபிரியா – 5
25. செல்வகுமார் நண்பர் – 10
ஆக மொத்தம் – 200 ஷேர் (இருநூறு பங்குகள்)
தலா ஒரு ஷேர் மட்டும் வாங்க விருப்பத்தைத் தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் (மொத்தம் 26 பேர்):
1. கஸாலி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்
2. அசோக் ரங்கநாதன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
3. கோவை விநியோகஸ்தர் குமரேசன்
4. கோவை விநியோகஸ்தர் சண்முகம் சங்க மேலாளர்
5. எம். தம்பிதுரை இணை இயக்குனர்
6. நெல்லிக்குப்பம் விஜயா தியேட்டர்
7. தர்மபிரபு தயாரிப்பாளர் ரங்கநாதன்
8. அச்சாரம் சேகர்
9. வெல்கோ தியேட்டர் ராஜரத்தினம்
10. வாராகி அம்மன் பிக்சர்ஸ் திரு வாராகி
11. ஆர். பார்த்திபன் நியூ தமிழன் பிக்சர்ஸ்
12. கவுன்சில் சௌந்தர்
13 பாபு கிணத்துக்கடவு திரையரங்கு
14. திரவிய பாண்டியன் தயாரிப்பாளர்
15. தீக்குச்சி தயாரிப்பாளர்
16. வாரணாசி தியேட்டர் கதிர்வேலு
17. மணிஸ் லெட்டர் விஜயகுமார்
18. பரத் சீனி, கோலிசோடா தயாரிப்பாளர்
19. தர்மராஜ் படத்தயாரிப்பாளர்
20. சிவயோகன், ஏ பிலிம்ஸ்
21. ஜெயபிரகாஷ், பெரியநாயகி அம்மன் கிரியேஷன்ஸ்
22. கே. பாலு, நிமோ புரோடக்சன்ஸ்
23. சுரேஷ், டைரக்டர்
24. ஜி எஸ் முரளி, கோலிவுட் கிரியேஷன்ஸ்
25. வெங்கடேஷ், ஓசூர்
26. சாம்ராஜ், தயாரிப்பாளர்.