ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் பார் சேல், ஸ்ரீமந்துடு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் பார் சேல், ஸ்ரீமந்துடு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கமிட்மெண்ட் படத்தில் நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. எனக்கும் அந்த பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன். பல நடிகைகள் இந்த கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். திரைப்பட துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சினை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மன ரீதியாக இதற்கு உடன்பட தயாராகி விடுகின்றனர். இதனால் தான் அவர்களுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தென்னிந்திய நடிகைகள் நீச்சல் உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். அதற்கு அவர்கள் சம்மதிப்பது இல்லை. நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்து விட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து ஒழிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.