சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய-சீன எல்லை பகுதியில் நீடிக்கும் பதற்றம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த இந்த ஆலோசனையின் போது, “இந்திய எல்லை பகுதியில் யாரும் ஊடுருவவில்லை” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவிற்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால் இந்திய வீரர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்றும்? எங்கு கொல்லப்பட்டனர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் இந்தியா எந்த ஒரு பகுதியையும் சீனாவிடம் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் பிரதமர் கூறிய கருத்து குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.