பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,06,10,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,14,468 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பிரேசிலில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 14,08,485 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 59,656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 7,90,040 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (27,27,996 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (6,54,405 பேர்) உள்ளன. இந்தியா நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது.