விளையாட்டு வினையானது”கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக்கூறி முககவசம் அணீய மறுத்தவர் கொரோனாவால் பலியானார்.
கொரோனா லட்சகணக்கான மக்களின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு தடுப்பூச்சி மற்றும் சிகிச்சை இல்லை இதனை வராமல் தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணீவது மட்டுமே. ஆனால் மாஸ்க் அணிய மறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹீரோவாக எண்ணி அவரைப் போலவே மாஸ்க அணிய மறுத்துவரும் கூட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது.
டிரம்பே இப்போது மாஸ்க் அணியத் தொடங்கி விட்டார், இந்த நிலையில், டிரம்பை குருட்டுத்தனமாக பின்பற்றிய ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
ஒஹையோவைச் சேர்ந்த ரிச்சர்டு ரோஸ் (37), ஒரு தீவிர டிரம்ப் ரசிகர். முன்னாள் ராணுவ வீரரான ரிச்சர்டு, சமூக ஊடகங்களில் கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட், என்று கூறிவந்தார்.சமூக ஊடக பிரியரான ரிச்சர்டு, ஏப்ரல் 28 அன்று பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், நான் மாஸ்க் எல்லாம் வாங்க மாட்டேன், கொரோனா என்பது வெறும் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று எழுதியிருந்தார்.
ஆனால், ஜூலை 1ஆம் தேதி அன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகவே, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன. டிரம்பை ஆஹா ஓஹோவென புகழும் ரிச்சர்டு, ஜூலை 4ஆம் தேதி பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார்.டிரம்பை பின்பற்றி உயிர்விட்ட முதல் நபர் அல்ல ரிச்சர்டு என்பது குறிப்பிடத்தக்கது.