இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம், கர்நாடக போன்ற மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதை தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, கொரோனா பாதிப்பால் எற்படும் மரணத்தை மத்திய அரசு மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த மாயை விரைவில் உடையும், இந்தியா அதற்கான விலையை கொடுக்கும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதில் குறிப்பிட்டுள்ளார்.