தோட்டப் புறங்களை நகர் புறமாக மாற்றி அமைத்தது எமது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (25) மாலை ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தை தோட்டப் புறங்கள் என கூற முடியாது. அதனை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். மலையக மக்களை பாதுகாத்து கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சி. மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று வெவ்வேறு இடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் விழ்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா தொற்றை அரசாங்கம் பாதுகாப்பதில்லை. நாள் ஒன்று 5000 ஆம் பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் இன்று இல்லை. சிறந்த பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால் தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.
நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மற்றுமொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளுபவர்கள் டெங்கு நோயினால் உயிரிழக்க நேரிடும். ஆகையால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நிலமை தான் தற்பொழுது கணப்படுகிறது. அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இங்கு எவ்வித தயார் நிலைகளும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் வெளிநாடுகளோடு எமக்கு சிறந்த தொடர்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் 6 ஆயிரம் டொலர்களை நாம் தேடிகொள்ளுவோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக சுமார் 10 இலட்சம் பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு எமது அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவோம். சிலர் எம்மை விமர்சனம் செய்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் எங்கள் காரியாலயத்தை கைபற்ற வேண்டுமென கூறுகிறார்கள். திருட்டு கும்பல்களுக்கு யார் வாக்களிக்க போவது. இந்த வீட்டை இரண்டாக பிளவுபட செய்தவருக்கா அல்லது அந்த வீட்டை பிளவுபட செய்த மனிதருக்கா?
சிலர் கூறுகிறார்கள் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என கூறுகிறார்கள். இறுதியில் என்னை நீதிமன்றுக்கும் அழைத்தார்கள். சட்டம் என்பது எங்கு சென்றாலும் ஒன்று தான். நான் ஒன்றை கூறுகிறேன். இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் மாத்திரமல்ல சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தீர்பு ஒன்று தான். எனது காரியாலயத்தையோ அல்லது கட்சியின் காரியாலயத்தையோ யாராவது கைபற்ற நினைத்தால் நான் பொலிஸாருக்கு அறிவிப்பேன் கைது செய்யுமாறு. அதன் பிறகு பொலிஸ் சிறையில் இருக்க கூடும். அதற்கு பிறகு நீதவான் முன்னிலையில் முன்னிலையாக நேரிடும்.
என்னை கூறுகிறார்கள் அரசாங்கத்தோடு டில் வைத்து கொண்டுள்ளதாக. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்களுக்கு ஒன்று கூறுகிறேன். எமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் நாட்டை பாதுக்க முடியும். வீட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும். கைகளுக்கு பணம் வழங்க முடியும் அனைத்துக்கும். ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என குறிப்பிட்டார்.
-மலையக நிருபர் சதீஸ்குமார்-