இந்தி திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்தி பட உலகில் தன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் சதி செய்வதாக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை என டுவிட்டர் பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டுக்கும் உயிர்வாழும், எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான் எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ளது. ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-
பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.
‘தில பெசாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.
அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று
பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.