ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை அரசு காக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது.
மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.
———
மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை குறித்த விவரங்கள் நேற்று முன்தினம் வெளியானது. இதற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கை தான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்.
—–
கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் 4 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் நேரடியாக ரிலீசாகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. வித்யாபாலன் நடித்துள்ள சகுந்தலாதேவி படம் நேற்று இணைய தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தமிழில் மேலும் 2 படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகிறது. சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ள டேனி படம் இன்று ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார். அதிரடி கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது. இதுபோல் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன் நடித்துள்ள லாக்கப் படம் வருகிற 14-ந்தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துப்பறியும் திகில் படமாக தயாராகி உள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ள இந்த படத்தை எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். மேலும் சில படங்கள் அடுத்தடுத்து ஓ.டி.டி தளத்தில் ரிலீசாக உள்ளன.