அலைகள் வாராந்த பழமொழிகள் 07.08.2020

இம்முறை வியாபாரத்திற்கு தேவையான ப்ராண்டிங் பற்றிய வர்த்தக தொழில் ஆலோசனைகள் வருகின்றன.

01. வர்த்தகத்தில் வெற்றியடைய வேண்டுமா.. கண்டிப்பாக அதற்கு ஒரு ப்ராண்ட் வேண்டும், அதாவது வியாபார சின்னம். அப்போதுதான் நம்மை மற்றவரில் இருந்து வித்தியாசப்படுத்தலாம்.

02. வாடிக்கையாளர் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் ப்ராண்ட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர் பாவிக்கும் ப்ராண்ட் அவர் பெருமையை பறைசாற்றும்.

03. வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு அதன் ப்ராண்ட் காரணமாக உலகம் முழுவதும் பெரும் மதிப்புண்டு. அதன் வருமானத்தை பார்த்தால் உலகத்தின் நாலாவது நாடுபோல இருக்கும். வருடாந்த வருமானத்தை பார்த்தால் 157 நாடுகள் அதன் பின்னால்தான்.

04. ஐ.போன் என்ற ப்ராண்ட் 2007 ல் வந்து, 120 வருட பழைய கொக்கோ கோலாவையும், 60 வருடங்கள் பழைய மக் டொனால்சையும் முந்தியது அதன் ப்ராண்டால்தான்.

05. அமேசன் என்ற வர்த்தக அடையாளத்தின் வருடாந்த வருமானம் கென்யா நாட்டின் வருமானத்தை விட அதிகம் காரணம் ப்ராண்ட்..!

06. பெப்சியின் விற்பனை வருமானம் ஓமான் நாட்டினுடைய வருமானத்தை விட அதிகம். உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் வருமானத்தில் பெப்சி 69 வது நாடு போல இருக்கிறது அப்படி வருகிறது வருமானம். பெப்சி என்ற பெயரே ஒரு பெருமையை தருகிறது பலருக்கு.

07. ஒவ்வொரு விளையாட்டு வீரனும் ஒரு வர்த்தக சின்னம்தான். செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் எல்லாம் வியாபார சின்னங்களாகி பெயர் பெற்றவைதான்.

08. இன்று கம்பனிகள் வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் அவற்றின் பொருட்களுக்காக அல்ல அவற்றின் வியாபார சின்னங்களுக்காகத்தான்.

09. ப்ராண்டின் மதிப்பு அதன் விற்பனையிலும் பாவனையிலும்தான் இருக்கிறது.

10. ஜாக் ட்ரவுட் 2006ல் எழுதிய புத்தகம் ப்ராண்டிங் பற்றி கூறும்போது வித்தியாசப்படுத்து அல்லது செத்து மடி என்று கூறுகிறது.

11. கடுமையான உழைப்பும் நம்பிக்கையும், இடையறாத தொழிற்பாடும், இல்லாவிட்டால் ப்ராண்டை உருவாக்க முடியாது.

12. ஒரு ப்ராண்டைப்பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதல்ல வாடிக்கையாளர் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் ப்ராண்ட் உருவாக்கலின் முக்கியம்.

13. நாம் அழகாக இருப்பதாக நினைக்கலாம் ஆனால் நம்மை பார்க்கும் பெண்கள் அப்படி நினைக்கிறார்களா என்பதுதான் கேள்வி.. இது போலத்தான் ப்ராண்டும். நாம் ஒரு கடைக்கு பெயர் வைக்கலாம் ஆனால் அதை மக்கள் முக்கியமான கடையாக கருத வேண்டும்.

15. ப்ராண்ட் என்பது வாடிக்கையாளர் மனதில் நாம் ஏற்படுத்தும் ஓர் இமேஜ் அதாவது ஒரு பிம்பம்.

16. ப்ராண்ட் என்பது ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

17. கல்யாணத்தை கட்டிப்பார், வீட்டை கட்டிப்பார் என்பார்கள் அது போலத்தான் ப்ராண்டையும் உருவாக்கிப்பார் என்பார்கள ஏனென்றால் அதுவும் கடினமான வேலை.

18. நாம் போட்டியிடும் மார்க்கட்டை தெரியாமல் ப்ராண்டை உருவாக்கினால் அது வெற்றி தராது.

19. வெயில் காலத்தில் சோப் அதிகம் விற்கும் காரணம் பலர் இரண்டு தரம் குளிப்பதால் சோப் விற்பனை அமோகமாக இருக்கும் இது சந்தையை அறிய ஓர் உதாரணம்.

20. தை தொடங்கி ஆடி தொடங்கும் வரை கல்யாணப்பட்டு அமோகமாக போகும். இப்படி சந்தையை புரிந்து மார்க்கட்டிங் செய்ய வேண்டும்.

21. எந்தத் தொழிலுக்கும் இலாபம் தேவை, இலாபத்திற்கு வேண்டியது அமோக விற்பனை. விற்பனைக்கு தேவை நல்ல பொருள், அதற்கு வேண்டும் ஒரு ப்ராண்ட்.

22. மார்க்கட்டிங் இலக்கு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வது. அப்படி செய்ய வேண்டும் என்றால் வாடிக்கையாளர் யார் ? அவருடைய தேவை என்ன ? என்பதை நாம் அறிய வேண்டும்.

23. ஒல்லியாக இருக்க வேண்டும் என்று அலையும் ஆண்களுக்காக இப்போது ஆடைகளை செய்கிறார்கள். இப்படி மனிதர்களின் அன்றாட புதிய தேவைகளைக் கண்டறிய வேண்டும்.

24. மேலும் மனிதர்களுக்கு வேண்டிய பூர்த்தி செய்யப்படாத தேவைகள் நிறைய உண்டு அவைகளை கண்டறிவது மார்க்கட்டில் மிக முக்கிய விடயம்.

25. யார் உங்கள் போட்டியாளர்.. நீங்கள் விற்கும் பொருள் தரும் அதே பயனை மற்றவர்களும் தந்தால் அவர்களே உங்கள் போட்டியாளர்.

அலைகள் பழமொழிகள் வரும்.
இடையில் சிறிய தடங்கல் வருந்துகிறோம். கொரோனா செய்திகளின் பரபரப்பு காரணமாகும். மக்களுக்கு கொரோனா தகவல்களை விரைந்து கொடுக்க அல்லும் பகலும் பாடபட வேண்டியிருந்தது.
07.08.2020

Related posts