இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பாதிப்பு சற்று தணிய தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா வேகம் மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், இலங்கையில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.
200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி, முன்புபோல் இயங்கலாம். 200 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்து செயல்படலாம். ஆனால், பள்ளி உணவகம் திறக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா தெரிவித்தார்.
இலங்கையில், கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 844 ஆகவும், பலி எண்ணிக்கை 11 ஆகவும் உள்ளது.