தமிழரசு கட்சி; தமிழ் காங்கிரஸ்; தேசியப்பட்டியல் வெளியீடு

19 பேர் அடங்கிய தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, குறித்த வர்த்தமானியில், ஶ்ரீ லங்க பொதுஜன பெரமுன, இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய கட்சிகள் தங்களது தேசியப் பட்டியல் உறுப்பினர்களை வழங்காத நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் (10) கட்சிகள் தங்களது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பின் மூலம் பெறப்படும் 196 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை இணைக்கும் வகையில், 29 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்படுவதற்கு, இலங்கை தேர்தல்கள் சட்டம் வழி வகை செய்துள்ளது.

இம்முறை கட்சிகள் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனங்கள் (29)
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 17
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
மொஹமட் முஸம்மில்
மர்ஜான் பளீல்
கலாநிதி சுரேன் ராகவன்
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் (கட்சியின் தவிசாளர்)
சாகர காரியவசம் (கட்சியின் பொதுச் செயலாளர்)
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
திருமதி மஞ்சுளா திஸாநாயக்க
பேராசிரியர் ரஞ்சித் பண்டார
பேராசிரியர் சரித ஹேரத்
கெவிந்து குமாரதுங்க
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
பொறியியலாளர் யாதமுனி குணவர்தன
டிரான் அலஸ்
கலாநிதி சீதா அரம்பேபொல
ஜயந்த கெட்டேகொட

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 1
தவராசா கலை அரசன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – (AITC) – 1
செல்வராசா கஜேந்திரன்

இதுவரை பெயர்களை வழங்காத கட்சிகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 07
தேசிய மக்கள் சக்தி (NPP) – 01
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 01
அபே ஜனபல பக்ஷய (OPPP) – 01

அதற்கமைய தற்போது வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வருமாறு…

Related posts