கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிகிச்சைக்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பலாப்பழத்தை விரும்பி சாப்பிட்டதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, 10ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும், அவரது மூளையில், ரத்தக்கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை முடித்து, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ‘பிரணாப் உடல்நிலை சீராக இருந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள அவர், கோமா நிலையில் உள்ளார்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.