இன்று 74 வது இந்திய குடியரசு தினம் மோடியின் உரையிலிருந்து..

நாட்டில் 74-வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை தொடர்ந்து 7-வது முறையாக ஏற்றிவைத்தார்.
பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள ராஜ் காட் மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பி்ன் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி செங்கோட்டைக்கு வந்தார். செங்கோட்டை லகோரி நுழைவாயில் பகுதியில் பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

———
நாட்டு மக்கள் ஒவ்வொவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை 74-வது சுதந்திரதினமான இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வதுசுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
எல்லோருடைய மனதிலும் இப்போது இருக்கும் சந்தேகம் கரோனா தடுப்பு மருந்து குறித்ததுதான். நம்முடைய விஞ்ஞானிகள் 3 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து அது பல்வேறு கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. கரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டால் விரைவாக பெரிய அளவு உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்த நாட்களி்ல் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

—–

தற்சார்பு இந்தியா எனும் வார்த்தை 130 கோடி இந்தியர்களின் தாரகமந்திரமாக மாறி, தோற்றத்தை உருவாக்கியுள்ளது. உலகளவில் பங்களிப்பை உயர்த்தி, வழிநடத்தும் இடத்துக்கு இந்தியா வர வேண்டும் என்று 74-வது சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
இந்த கரோனா வைரஸ் பரவல் காலத்தில், 130 கோடி இந்தியர்கள் மனதில் தற்சார்பு இந்தியா என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. தற்சார்பு இந்தியா எனும் கனவை நாம் நனவாக்குவோம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான திறமை,தன்னம்பிக்கை, செயல்திறன் அனைத்தும் இந்தியர்களுக்கு இருக்கிறது. நாம் ஒன்றை செய்ய முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும்வரை ஓய மாட்டோம்.
அடுத்த ஆண்டு 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்போகிறோம். ஒட்டுமொத்த தேசமும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம், குரல்கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும்.
உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. உலகை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இந்தியா வளர வேண்டும். உலகிலேயே அதிகமான இளம் தலைமுறையினரைக் கொண்ட நாடு இந்தியாதான். உலகிலேயே புத்தாக்க சிந்தனையுடனும், புதிதாகச் சிந்திப்பவர்களாக இந்தியர்கள் உள்ளனர். உலகளவில் இந்தியாவின் பங்களிப்பை நாம் உயர்த்த வேண்டும். உலகை வழிநடத்தக்கூடிய இடத்துக்கு வர வேண்டும்.

—-

சுதந்திர தினத்தை முன்னிட்டு 926 காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டுகிறது.
குறிப்பிடத்தக்க மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் 215 காவல்துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுிறது. மிகவும் குறிப்பிடத்தக்கப் புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கங்கள் 80 காவல் பணியாளர்களுக்கும், சிறப்பான சேவைக்கான காவல் விருதுகள் 631 காவல் பணியாளர்களுக்கும் வழங்கப்படுிறது.

—–

Related posts