ஏழு மணி மின் தடை உடன் சீர்செய்ய முடியாத ஆட்சி கண்டிக்காத ஊடகங்கள்..!

சிறீலங்கா ஊடகங்கள் நேற்று ஏற்பட்ட மின் தடை தொடர்பாக பூசி மெழுகி செய்தி எழுதியுள்ளன. ஒரு நாட்டில் ஏழு மணி மின் தடை என்றால் அதன் இழப்பு எத்தனை பெரியது..

இது குறித்து விசாரணைக்கமிசன் எதற்காக கண் துடைக்கவா..?

ஏன்ற கேள்வியை கேட்காமல் இப்படி உப்பு சப்பில்லாமல் எழுதியுள்ளன சிறீலங்காவின் செல்லாக்காசு ஊடகங்கள்.

——
மின் விநியோகத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (18) காலை ஒன்றுகூடவுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அளகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய 07 பேரைக் கொண்ட குழு நேற்று (17) நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கையை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு பூராகவும் பிற்பகல் 12.45 மணி முதல் சுமார் 7 மணித்தியாலங்களாக நீடித்த மின் விநியோகத் தடை மற்றும் அதன் காரணமான நீர் விநியோகத் தடை என்பன தற்பொழுது சீர் செய்யப்பட்டு, அனைத்து விநியோக நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

படிப்படியாக நேற்று இரவு 10.00 மணியளவில், நாடு பூராகவும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று நண்பகல் 12.45 மணியிலிருந்து நாடு பூராகவும் மின் விநியோகம் தடைப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இம்மின் விநியோகத் தடை காரணமாக, நீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டதோடு, வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்தமையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts