கவிஞர் வைரமுத்து உருக்கம்
“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களே, எங்கள் வாழ்வின் அன்றாடமே, எங்கள் மூளையின் ஒரு மூலையில் கூடு கட்டி பாடும் குயிலே. மீண்டு வரவேண்டும். இசை உலகை நீங்கள் ஆண்டு வரவேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும். மேகங்கள் வந்து வந்து போகும். வானம் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நடந்த என் கலைவாழ்வில் நாற்பது ஆண்டுகளாய் மாறாத மகா கலைஞன் நீ. நீ மீண்டு வருவாய். இசை உலகை ஆண்டு வருவாய். இந்த உலகமே உனக்காக வேண்டி நிற்கிறது. இந்த உலகத்துக்கு இன்பம் மட்டுமே கொடுத்து பழகியவன் நீ. துன்பம் கொடுக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும். பாட்டு குயிலே சிறகை விரி. கூண்டை உடை. மீண்டு வா. இசை உலகை ஆண்டுவா. பாடவா. பாடல் ராஜாவே எங்கே நீ எங்கே. கண்ணீர் வடியுதைய்யா எங்கே, கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான். கண்மூடி பார்த்தால் காதெல்லாம் நீதான். என்னானதோ ஏதானதோ சொல் சொல். பாலு உங்களுக்காக இசை உலகம் காத்து இருக்கிறது.”
—–