காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற கட்சி காங்கிரஸ். நேரு காலம் தொடங்கி இன்று வரை அந்த கட்சிக்கு என்ற தனிப்பெருமை உள்ளது.
ஆனால், தற்போது அந்த கட்சியில் சில தடுமாற்றங்கள் நிலவி வருகிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றார்.
ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத விதமாக படுதோல்வியை தழுவியது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருப்பில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என குறிப்பிட்டார். அதன் பின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்று வழிநடத்தி வருகிறார்.
இந்த சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியின் கருத்தை வரவேற்றுள்ளார். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கருத்துக்கு தானும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் நிலைபாட்டுக்கு எதிரான கருத்துக்களில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என குறிபிட்ட பிரியங்கா காந்தி, ஊடகங்களின் புதிய முகத்தை புரிந்துகொள்ள தாமதம் ஆகிவிட்டது எனவும் தெரிவித்தார்.