அரசியல் பழி வாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, இரா சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 7 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (18) முன்னிலையானார்.
அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.