சினிமாவிற்காக மட்டும் புரட்சிக்காரனாக வேடம் போடும் தமிழக நடிகரின் வரிசையில் வருகிறார் அடுத்த புரட்சிக்காரர்..
லாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக லாபம் உள்ளது. இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் 2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடமை வந்தது. லாபம் படத்தில் சுருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோரும் உள்ளனர்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் அதை முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
லாபம் படத்தில் விஜய் சேதுபதி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் புரட்சியாளராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுருதிஹாசன் மேடைகளில் புரட்சி பாடல்கள் பாடும் பெண்ணாக வருகிறார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுடுவது போன்ற படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை (சனிக்கிழமை) மாலை வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்தான் படத்தின் கதையா? என்பது அப்போது தெரியவரும்.