நடிகை தமன்னா பெற்றோருக்கு கடந்த வாரம் இறுதியில் கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்து, அந்த முடிவுகள் தற்போது வந்துள்ளன.
துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களது நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம். எனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடவுள் கருணையால் பெற்றோர்கள் தேறி வருகிறார்கள். உங்கள் எல்லோருடையை பிரார்த்தனைகளும் அவர்களை குணமாக்கும்.“
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். பாகுபலி படம் அவருக்கு பெயர் வாங்கி தந்தது. இது தவிர பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான நிலையில், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே உள்ளார்.
எனினும், வீட்டில் இருந்தபடியே உடலை பிட்டாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்வது, செல்பி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டார்.
ஊரடங்கிற்கு பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி வருகிறேன். உணவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன் என அவர் கூறினார். இந்நிலையில் நடிகை தமன்னா சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வாரம் என்னுடைய பெற்றோருக்கு கொரோனா இருப்பதற்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் உடனடியாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டோம். அதன் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், எனது பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நான் உள்பட குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அவர்கள் நலமுடனேயே உள்ளனர். உங்களுடைய வேண்டுதல்கள் மற்றும் ஆசிகள் அவர்களை குணமடைய செய்யும் என்று தெரிவித்து உள்ளார்.