சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கிவந்த அகஸ்தியா திரையரங்கம் நாளையுடன் (செப்.1ம் தேதி) நிரந்தரமாக மூடப்படுகிறது.
கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கில் முதல் திரைப்படமாக ‘பாமா விஜயம்’ திரையிடப்பட்டது. வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1,004 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்காகும்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘காவல்காரன்’, சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவந்த மண்’, ‘சொர்க்கம்’ உள்ளிட்ட படங்கள் இத்திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு சுகாதார வசதிகளுடன் இயங்கிய 70 எம்.எம் திரையரங்கான அகஸ்தியா, பெரிய அளவில் வருமானம் இல்லாததால் மூடப்படுகிறது.