பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கான், ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார்.
தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்குகிறது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார்.
ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகள் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.
தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் பங்கு கொடுக்கப்படுகிறது.