மலையக மக்கள் கடிதங்கள் மற்றும் அவசர தபால் சார்ந்த கடிதங்களை பெற்றுக் கொள்ளவதில் எதிர்நோக்கும் அசௌகரியங்களை போக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் நேற்று (30) நடைபெற்ற தபால் திணைக்களத்தின் விசேட நிகழ்வில் சிறப்புரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து இதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இன, மத வேறுபாடுகள் இன்றி சுமார் 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இதேபோன்று இன்னும் சில தினங்களில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தயடையாத ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்துள்ளார்.
நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும் என்றும் கூறினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)