அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன ஆய்வு செய்துள்ளார்.
கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை கருதி முதலீட்டாளர்களை அதிகரித்து யாழ் மாவட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு யாழ் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை வாளாகத்திற்கு விஜயம் செய்தார்.
யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பொறியிளாளர் ஆகியேபரும் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளருடனுடன் இணைந்து கைத்தொழில் பேட்டை வளாகத்தில் அமைத்துள்ள குறைபாடுகளை ஆராய்ந்தனர்.
ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளர் ,முதலீட்டு நிறுவனங்களின் குறைப்பாடுகளை ஆராய்ந்து தேவைப்பாடுகள் சம்மந்தமாக உரிய அமைச்சுகளுடன் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படுவதன் ஊடாக உள்ளூர் முதலீட்டாளர்களையும் உள்வாங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் யாழ் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வைப்பதன் ஊடாக வேலைவாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டும். எமது பொருளாதாரம் அனைத்து துறைகளின் ஊடாக முன்னேற்றம் அடையவேண்டும் என்றார்.
(அரசாங்க தகவல் திணைக்களம் )