வேற்றுகிரகவாசிகள் உள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஒருகோடி நட்சத்திரங்களை ஆராய்ந்த ஆஸ்திரேலியா வானியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்கள் குழு ஒன்று வேற்றுகிரகவாசிகள் குறித்து தேட அவர்கள் முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தினர். அவர்கள் வேலா பகுதியை ஸ்கேன் செய்து ஒரு கோடி நட்சத்திரங்களைப் ஆய்வு செய்தனர். ஆனால் வேற்றுகிரகவாசிகள் குறித்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கைவிரித்து உள்ளனர் வேற்றுகிரகவாசிகளின் அறிகுறியே இல்லை என கூறி உள்ளனர்.
பால் வெளீயில் மட்டும் சுமார் 10000 கோடி முதல் 30000 கோடி நட்சத்திரங்கள் வரை உள்ளன. ஆஸ்திரேலிய வானியலாளர்கள் வெறும் ஒருகோடி நட்சத்திரங்களை மட்டுமே ஆய்வு செய்து உள்ளனர்.எனவே இந்த முரண்பாடுகள் இன்னும் வேற்றுகிரகவாசிகளைத் தேடுபவர்களுக்கு ஆதரவாக உள்ளன.
இருப்பினும், விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகள் தேடலுக்கு குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்தியதால் அவர்களை கண்டறியமுடிய வில்லை. வேற்றுகிரகவாசிகள் மேம்பட்டதொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம என வாதாடுகிறார்கள்.