கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள பரிசோதனை கூடத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என அந்நாட்டு கிருமியியல் ஆய்வாளர் ெடாக்டர் லீ மெங்க் யான் பரபரப்பான தகவலை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள மருத்துவத் துறை அதிகாரிகள் தன்னை மிரட்டியதால் தான் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என சீனா கூறி வந்த நிலையில், இந்த மருத்துவரின் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் விடயத்தில் அமெரிக்கா சீனாவை குற்றம்சாட்டியது உண்மையோ என இப்போது ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 10 மாதங்கள் ஆகி விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ் எப்படித் தோன்றியது என்பது குறித்து இன்னும் ஒரு முடிவு கிடைக்கவில்லை.
இந்த வைரஸ் சீனாவின் வுகானில் உள்ள ‘வெட்’ சந்தையில் இலிருந்து பரவியிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொற்றுநோயியல் துறை நிபுணர்கள் ஊகிக்கிறார்கள். வுகானில் உள்ள மீனிலிருந்து பரவியதாகவும் வெளவாலிடம் இருந்து பரவியதாகவும் சிலர் கூறுகிறார்கள். இந்த நிலையில் இந்த வைரஸை சீனா வேண்டுமென்றே உருவாக்கியிருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், சீனாவில் உள்ள வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து கொவிட் 19 வைரஸ் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சீன வைரஸ் நிபுணர் லி மெங்க் யென் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ெஹாங்ெகாங்கில் உள்ள பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தவர் லீ மெங்க் யென்.
இவர் வீடியோ மூலம் கூறுகையில் “இந்த வைரஸ் பரவலை வெளிப்படையாக சீனா ஒப்புக் கொள்வதற்கு முன்னரே, அதன் பரவல் அவர்களுக்குத் தெரியும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு கருதி சீனாவிலிருந்து தற்போது அமெரிக்காவுக்கு சென்று விட்டேன். நான் ெஹாங்ெகாங் சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது எனது உயரதிகாரி வுகானில் சார்ஸ் போன்ற வைரஸ் பரவுவது குறித்து என்னிடம் கூறினார்” எனக் குறிப்பிட்டார்.
“மேலும் அது குறித்து ஆய்வு செய்யுமாறு என்னிடம் அவர் கூறியிருந்தார். ஆனால் எனது முயற்சிகள் அனைத்து பின்னர் தடுக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தோன்றுவதாக நான் கூறிய நிலையில், ‘அமைதியாக இருங்கள், கவனமாக இருக்க வேண்டும்’ என அவர் என்னிடம் தெரிவித்தார்.
இது குறித்து நாம் வெளியில் கூறினால் நாம் பிரச்சினைகளில் சிக்கி விடுவோம் என்றும் காணாமல் போய் விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து அந்த வைரஸ் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அந்த வைரஸ் வெட் சந்தையில் உருவாகவில்லை. அந்த ஆதாரத்தை பார்த்தால் உயிரியல் அறிவு இல்லாதவர்கள் கூட அதை படித்து புரிந்து கொள்ளலாம்.
வுகான் கூடத்தில் ஏன் அந்த வைரஸ் தயாரிக்கப்பட்டது, அதை ஏன் அவர்களாகவே தயாரித்தார்கள் என்ற விபரங்கள் உள்ளன. சீன அதிகாரிகள் நான் நாட்டை விட்டு வெளியேறிய பின்பும் என்னை பற்றிய அனைத்து தகவல்களையும் அழித்து விட்டார்கள். என்னை பற்றி வதந்தியை மக்களுக்கு பரப்பி வருகிறார்கள்” என லீ பெங்க் யான் குற்றம்சாட்டியுள்ளார்.