கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதனைத் தொடர்ந்து தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.