உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
´உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பேசுவதானால் அதன் பொறுப்பை, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்க வேண்டும். அமைச்சரவையில் இருந்தாலும் அனைவருக்கும் அதில் தலையிட முடியாது. அவர்கள் இருவருக்கும் தான் அந்த பொறுப்பு உள்ளது. தோல்வி ஏற்பட்டால், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்பது அனைவராலும் தலையிடக்கூடிய ஒன்றல்ல´.
கேள்வி – புலனாய்வப் பிரிவு குறித்து நன்கு அறிந்துள்ள தாங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? நாடு ஆபத்தில் உள்ளது என வௌியில் வந்து ஏன் வௌிப்படுத்தவில்லை?
´அமைச்சரவையில் இருக்கும் போது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் தான் பாதுகாப்பு குறித்து பேச முடியும். எனக்கு இருந்தது வனவிலங்கு. எனது பொறுப்பாக இருந்தது வனவிலங்கு குறித்த பேசுவது. தனிப்பட்ட முறையில் நாம் அவர்களுக்கு பேசி உள்ளோம். உத்தியோகபூர்வமாக பேச முடியாது. எனினும் நாம் கூறிய விடயங்களை ஒருபோதும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. பாரியளவில் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. பயங்கரவாதம் உருவாகியது. கட்டாயமாக குறித்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்´ என்றார்.