திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 69 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இன்றும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—–
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
——