கொரேனா தொற்று குறித்த அச்சம் காரணமாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க முற்பட்டுள்ள நிலையில் சந்தையில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ். நாதன் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்தில் விற்கப் பட வேண்டிய உணவுப் பொருட்கள் கடந்த வாரம் ஒரு நாளில் விற்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், அரிசி தவிர அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் முதல் மினுவாங்கொடை கொத்தணியூடாக பெருமளவானர்களுக்கு கொரோன தொற்றியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நாடளாவிய முடக்கம் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது.இதனால் மக்கள் பொருட்களை வாங்குவதில் முண்டியடித்து வருவதாக அறிய வருகிறது. ”