பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு.. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மலக கூறி உள்ளார்.
கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை மணமுடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த முதல்நாளன்றே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தன் கணவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
எலிசபெத் ஹெலனின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக வனிதா தெரிவித்திருக்கும் நிலையில், அவரது திருமணம் குறித்த விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த் நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பீட்டர்பால் உடன் நடந்த பிரச்சினை குறித்து வனிதா விஜயகுமார் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “பீட்டர் பால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு வந்ததால், நான் பேரதிர்ச்சி அடைந்தேன்.. அதிர்ஷ்டவசமாக காப்பாற்றினேன். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்துவிட்டோம். மீண்டும் சிறிது நாளில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு ஒரு துணை வேண்டும் என்று உங்களை திருமணம் செய்தேனே தவிர, உங்கள் இறப்பை காண அல்ல என்று அவரிடம் பேசினேன்.
அவரை ட்ராக் செய்ததில், அவரை கையும் களவுமாக பிடித்தேன். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகியிருந்ததால், அதை விட வற்புறுத்தினேன். அதன் பிறகுதான் கோவா சென்றோம். பீட்டரின் சகோதரருக்கு
உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தி வந்ததால், அதை காரணம் காட்டி மது குடித்தார். இந்த பழக்கம் எத்தனை நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது என்று தெரியவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது. ஏற்கெனவே பலவீனமாக உள்ள அவர் குடித்திருப்பது எனக்கு கவலை அளித்தது. சரி. எப்படியோ வீட்டுக்கு வந்துவிட்டோம். அன்றையிலிருந்து ஒருவாரம் தொடர்ந்து குடித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் குடித்தார். போன் ஸ்விட்ச் ஆப்லேயே வைத்துள்ளார். அவர் எங்கிருக்கார் என்று தெரியவில்லை.போதை பழக்கம்தான் அவருக்கு அதிகம் உள்ளதால், எனக்கு கவலை அளிக்கிறது.
என் சொந்த பணத்தில்தான் என் குழந்தைகளையும், பீட்டர்பாலையும் காப்பாத்திட்டுருக்கேன். என் வாழ்நாளில் நான் ஏமாந்தது அன்பினால்தான்.
குடிப்போதையால பீட்டர்பால் ரொம்ப தப்பு பண்றாரு. ஏமாந்துட்டேன்.. தோற்றுவிட்டேன்.. காதல், திருமணம் எனக்கு அமையவில்லை.