20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்பட இணங்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அடுத்த வருடத்திற்குள் கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமையை உடையவர்களுக்கு பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்ற அதிகாரமுடைய ஏனைய பதவிகளை வகிப்பதற்கும் உள்ள உரிமை உறுதிச்செய்யப்படும் என்ற சரத்து நிச்சயம் சேர்க்கப்படும் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதாதத்தை அடிப்படையாக கொண்டே மேற்குறித்த தீர்மானத்திற்கு வந்தாகவும் விமல் வீரவங்க தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் அந்த சரத்து நிச்சயம் உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
´நீதியமைச்சர் அலி சப்ரியால் பாராளுமன்றில் முன் வைக்கப்படவுள்ள பதிலளிக்கும் அறிக்கையில் அந்த விடயம் உறுதியாக தெரிவிக்கப்படும். அது குறித்து நம்பிக்கை வைத்து முரண்பாடுகள் ஏற்படாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். எனவே, ஜனாதிபதி மேல் நம்பிக்கை வைத்து தெரிவுக்குழு கூட்டத்தில் குறித்த சரத்து தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தும் போது வாக்களிக்காமல் இருக்க ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த விடயத்தல் முரண்பாடுகள் இன்றி செயற்பட தீர்மானித்துள்ளோம்´ என்றார்.