இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி நியுஸ்இன்ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
நியுஸ் இன் ஏசியா மேலும் தெரிவித்துள்ளதாவது.
28ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை தலைவர்களிடம் முகத்திற்குநேரே சீனாவுடனான உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரும், இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் மக்கள் வழங்கிய ஆணையின்அடிப்படையிலும், ,சட்டம் மற்றும் அரசமைப்பு நாட்டின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என மைக்பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர்.
அதேவேளை உலகிலும் பிராந்திய அளவிலும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் எனவும் அவர்கள் மைக்பொம்பியோவிடம் தெரிவிக்கவுளனர்.இலங்கையை எப்படி ஆட்சிசெய்யவேண்டும் என்பதை வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தெரிவிக்கவேண்டியதில்லை என இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் மைக்பொம்பியோவிற்கு தெரிவிக்கவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என இலங்கையை கேட்டுக்ககொள்ளவுள்ள மைக்பொம்பியோ இருதரப்பு இணக்கத்துடனான திட்டங்களை முன்னெடுப்பதற்கு வேறு எந்த நாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளார்.
480 மில்லியன் டொலர் எம்.சி.சி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக்பொம்பியோ இலங்கையின் அரசதலைவர்களை கேட்டுகொள்ளவுள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கவேண்டும் அல்லது மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
சோபா உடன்படிக்கை இலங்கையின் அரசமைப்பிற்கும் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை குறித்து ஆராயப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு எதிராக கூட்டணியான குவாட்டிற்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி 30வருட யுத்தத்திலிருந்து சமீபத்திலேயே விடுதலையாகியுள்ள இலங்கை இன்னொரு சர்வதேச மோதலின் களமாக மாறுவதை விரும்பவில்லை என மைக்பொம்பியோவிடம் நாங்கள் தெரிவிப்போம் என வெளிவிவகார அமைச்சகத்தின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளும் சுதந்திரமான நடமாட்டம் உறுதிசெய்யப்படுவதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இலங்கை தலைவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் முதலீடுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளகூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்பது குறித்து கருத்துவெளியிட்டு;ள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கையில் முதலீடுவது வரவேற்கப்படுகின்றது, அமெரிக்கா சீனாவின் முதலீடுகளின் அளவிற்கு முதலீடு செய்யுமென்றால் அதனை வரவேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.