தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – சீனா எச்சரிக்கை தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.இந்த நிலையில் தைவானுக்கு வான்வழி-தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1 பில்லியன் டாலர் (ரூ 7329 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து உள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வாரம் 135 வான்வழி-தரை ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
இரண்டு அமெரிக்க பெரிய நிறுவனங்கள் சமீபத்தில் 100 கோடி டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை தைவானுக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டு உள்ளனர். வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் “ஆயுத விற்பனையை நிறுத்த” அமெரிக்காவை வலியுறுத்தினார்.
தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனையின் சமீபத்திய செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஆயுத விற்பனையில் பங்கேற்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று கூறியுள்ளார்.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும், தைவான் சீனாசுதந்திரத்தை அறிவிப்பதை நோக்கி தக்க பத்லடி கிடைக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.