பிரபலங்கள் பெரும்பாலும் பிராண்டுகளாகக் காணப்படுகிறார்கள். அவர்களின் வேலை, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தை மற்றும் ஊடகங்களில் உள்ள பிம்பம் அவர்களின் ‘பிராண்ட் மதிப்புக்கு’ குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க உதவுகின்றன.
சமீபத்தில் வெளியான டிஐஏஆர்ஏ ஆராய்ச்சி அறிக்கை, ‘பிரபலங்கள் மனித பிராண்டுகளாக’என்பது குறித்து விரிவான ஆய்வை நடத்தி உள்ளது.
டிஐஏஆர்ஏ TIARA என்பது நம்பிக்கை, அடையாளம், கவர்ச்சிகரமான, மரியாதை மற்றும் பிரபலம் ஆகியவற்றின் சுருக்கமாகும். சினிமா, ஆளுமை மற்றும் மனித காரணிகளை உள்ளடக்கிய 64 செயலில் உள்ள பண்புகளில் தரவை ஆய்வு பயன்படுத்துகிறது.
இது ஒரு தனித்துவமான ஆராய்ச்சி ஆகும், இதன் கள ஆய்வை புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான ரகுடெனால் நடத்தி உள்ளது. 23 நகரங்களில் 60,000 நபர்களிடம் விளம்பரங்களில் வரும் 180 பிரபலங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக விளம்பரங்களில் பிரபலங்கள் வரும் போது மக்கள் அதை காண அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இதனை அடிப்படையாக கொண்டே கேள்விகள் கேட்டகப்பட்டன.
பாலிவுட்டைச் சேர்ந்த 69 பேர் (37 ஆண், 32 பெண்); தொலைக்காட்சியில் இருந்து 67 (46 ஆண், 21 பெண்), 37 விளையாட்டு (30 ஆண், 7 பெண்), மற்றும் 7 பிரபல ஜோடிகள் குறித்தும் கருத்துகள் கேட்கப்பட்டது.ஆய்வு அறிக்கையின்படி, அமிதாப் பச்சன் இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்பிற்குரிய பிரபலமாவார். பாலிவுட்டில், அக்ஷய் குமார் அந்த மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார், அதே நேரத்தில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா இந்திய தொலைக்காட்சி ஆளுமையாக மிகவும் மதிக்கப்படுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விளையாட்டுகளில் முன்னிலை வகிக்கிறார், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான பிரபல ஜோடியாக உள்ளனர்.
முன்னாள் தொகுப்பாளரும், பாலிவுட் நட்சத்திரமுமான ஆயுஷ்மான் குரானா 88.5 மதிப்பெண்ணுடன் இந்தியாவை அதிகம் அடையாளம் காட்டுகிறார். விக்கி கவுசல் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோரும் இதே மதிப்பெண் பெற்று உள்ளனர்.
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் அதிக அடையாள மதிப்பெண் பெற்றுள்ளனர், எனவே அவர்கள் பெரும்பாலான இந்தியர்களின் தொடர்புபடுத்தும் ஜோடியாக உள்ளனர்.
ஆலியா பட்-ரன்பீர் கபூர் மிகவும் சர்ச்சைக்குரிய ஜோடியாகத் தோன்றுகிறார்கள், அதே நேரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் சல்மான் கான் ஆகியோர் பாலிவுட்டில் சர்ச்சை நபர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வாக்களித்து உள்ளனர்.
ஆராய்ச்சி அறிக்கையின்படி ஆலியா பட் இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான பிரபலமாக உள்ளார். அதே நேரத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் பாலிவுட்டில் முதலிடம் பிடித்து உள்ளனர்.
தொலைக்காட்சியில் ஸ்வப்னில் ஜோஷி மற்றும் திவ்யங்கா திரிபாதி தஹியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், விராட் கோலி மற்றும் சானியா மிர்சா ஆகியோர் விளையாட்டில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளனர். பெரும்பாலான பதிலளித்தவர்கள் ‘விராட்-அனுஷ்கா’ மிகவும் கவர்ச்சிகரமான ஜோடி என்று கண்டறிந்தனர்.
இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரியவர்: அமிதாப் பச்சன்
பிரபல இந்தியா என மிகவும் அடையாளம் காணப்பட்டவர் : ஆயுஷ்மான் குர்ரானா
இந்தியாவின் மிகவும் மதிப்புக்குரியவர்: அக்ஷய் குமார்
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய விளையாட்டு வீரர்: ஹர்திக் பாண்ட்யா
இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமானவர்: அலியா பட்
இந்தியாவின் மிகவும் நவநாகரீகமானவர்: விராட் கோலி
இந்தியாவின் மிக அழகானவர்: தீபிகா படுகோனே
இந்தியாவின் மிகவும் பல்துறை நாயாகர்: நவாசுதீன் சித்திகி
இந்தியாவின் நம்பர் 1 இதயத்திற்கு நெருக்கமானவர் : ரன்பீர் கபூர்
இந்தியாவின் மிகவும் மயக்கும்தன்மை கொண்டவர்: ராதிகா ஆப்தே
இந்தியாவின் மிகவும் கவர்ச்சியானவர்: பிரியங்கா சோப்ரா
இந்தியாவின் மோஸ்ட் புகழ்பெற்றவர்: எம்.எஸ். தோனி
இந்தியாவின் மிகவும் நம்பகமானவர்: சைனா நேவால்