தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு என்று வந்தது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
—–
நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், 300 க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 1800 க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
—–
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் பிரச்சினையில் தலையீடு செய்வது இலங்கையின் வேலை அல்ல என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித்த கொஹொண தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது முக்கியம் எனவும் இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தெளிவான நோக்கம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
´இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்தவொரு உறவு உள்ளது. அந்த உறவை வலுப்படுத்துவதே எனது நோக்கம். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தெளிவான நோக்கம் உள்ளது. தற்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. அதனை அந்த இரு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல. நாட்டின் நலன், சுயாதீன தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது முக்கியமாகும். இலங்கை ஒரு பிரிப்படாத நாடு என்ற வகையில் உலக வல்லரசு நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுவது எமது நோக்கம் அல்ல´ என்றார்.