விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்- அமைச்சர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.