மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டி வெளி வயல் காணி ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாகிமகசீன் 15, ரவைகள் 373, மகசீன் பாக் ஒன்று என்பன நேற்று (02) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மேட்டுநில காணியில் பயிரிடுவதற்காக நேற்று (02) காணி உரிமையாளர் ஒருவர் மாடுகளால் உழும் நடவடிக்கையிளை மேற்கொண்ட போது நிலத்தில் புதைதத்து வைக்கப்பட்டிருந்து இரு பொதிகள் வெளிவந்துள்ளதையடுத்து பொலிஸாருக்கு தெரியப்ப டுத்தியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சென்று அந்த பொதியை சோதனையிட்டபோது அதிலிருந்து ரி56 ரக துப்பாகி மகசீன் 15, ரவைகள் 373, மகசீன் பாக் ஒன்றை மீட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
——
இலங்கையில் இதுவரையில் 11,335 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 275 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7857 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 6,816 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 5249 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6065 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
——-
நேற்றைய தினம் புதிதாக இனங்காணப்பட்ட 275 கொரோனா தொற்றாளர்களுள் 90 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 34 பேர் மஹர பகுதியையும் 18 பேர் பியகம பகுதியையும் மற்றும் 16 பேர் களனி பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கம்பஹா பகுதியில் 9 பேரும், கந்தான பகுதியில் 2 பேரும், வத்தள பகுதியில் 3 பேரும், பேலியகொட பகுதியில் 3 பேரும், ராகம மற்றும் கடவத்த பகுதிகளில் தலா 2 பேரும், மினுவங்கொட பகுதியில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று இனங்காணப்பட்டவர்களுள் 61 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை களுத்துறை, காலி, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் நேற்றை தினம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
——
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 2 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 1992 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 307 வாகனங்கய் கைப்பற்றப்பட்டுள்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.