துருக்கி அதிபர் வன்முறை உணா்வைப் பரப்பும் வகையில் பேசி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் வானொலி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், துருக்கி அதிபா் எா்டோகன், பிரான்ஸுக்கு எதிராக வன்முறைப் பிரகடனம் செய்து வருகிறார்.
வெறுப்பைப் பரப்பும் வகையிலான கருத்துகளையும் அவா் தொடா்ந்து பதிவு செய்து வருகிறார். இது ஏற்புடையதல்ல, தனது கருத்துகளால் பிரான்சுக்கு மட்டும் எா்டோகன் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ஒற்றுமைக்கே அவா் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதால், அவர் இந்த நிலைப்ப்பாட்டை உடனடியாக கைவிட விட வேண்டும்.
தங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், துருக்கி அந்த முடிவை எடுத்தாக வேண்டும்.வன்முறைக் கருத்துகளைக் கைவிட துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.