கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கிழக்கு சீமையிலே படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள தவசிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சக நடிகர்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்றும் தவசி வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருந்தார். அத்துடன் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் உள்ள தவசியின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அவருக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். சிவகார்த்திகேயன் முதல் கட்டமாக தவசிக்கு ரூ.25 ஆயிரம் உதவி வழங்கி இருக்கிறார். இதுபோல் நடிகர் சூரி ரூ.20 ஆயிரம் நிதியும் ஆஸ்பத்திரியில் அவரை கவனித்துக்கொள்பவருக்கு மூன்று வேளை உணவும் வழங்குவதாக அறிவித்து உள்ளார். சூரியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்று தவசி பேசி நடித்த வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று செல்போன் மூலம் தவசியை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் நலம் விசாரித்தார். தற்போது நடிகர் சிலம்பரசன் நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.