பொக்ரான் அணுசக்தி சோதனை: விஷயத்தில் அமித் ஷா, நரேந்திர மோடி எதிர்வினைகள் கடுமையாக எதிர்மாறாக இருந்தன என்று புதிய புத்தகம் கூறுகிறது
அரசியல் விஞ்ஞானி வினய் சீதாபதி ஜுகல்பாண்டி மோடிக்கு முன் பாஜக என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். பாரதீய ஜனதா குறித்துபல்வேறு கருத்துக்களை கூறி உள்ளார்.
அதில் ஆறு தசாப்த கால உறவில், வாஜ்பாயும் அத்வானியும் ஆளுமை மற்றும் நம்பிக்கைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு அணியாக பணியாற்றினர். அவர்களை ஒன்றாக வைத்திருப்பது சகோதர அன்பு மற்றும் தொழில்முறை எண்ணங்கள், நிச்சயமாக, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு சித்தாந்தம். மோடிக்கு முன் பாஜக என்ன, அது ஏன் வென்றது என்பதை அவர்களின் கூட்டு விளக்குகிறது.
இந்தியா பொக்ரான் அணு குண்டு சோதனை நடத்தியதும், அமெரிக்கா அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்ததும், அப்போதைய பாஜக பொதுச் செயலாளராக இருந்த மோடி, அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள். குடியுரிமை பெறாதவர்களின் ஆதரவைத் திரட்டுவதில் பங்கு வகித்தார் என கூறி உள்ளார்.
1995 இல் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்று, என்.ஆர்.ஐ.க்களுடன் தங்கியிருந்து ஆதரவு திரட்டினார். 1990 களின் பிற்பகுதியில், மோடி அமெரிக்காவில் அதிக நேரம் செலவிட்டார், அப்போது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அமெரிக்கா சென்ற போது மோடியை சந்தித்தார், நீங்கள் இங்கு நிரந்தரமாக குடியேற திட்டமிட்டுள்ளீர்களா?” என அவர் கேலி செய்தார் என குறிப்பிட்டு உள்ளார்.
அணுசக்தி சோதனைக்குபின்னர், பொருளாதாரத் தடைகளை எளிதாக்க அமெரிக்க காங்கிரஸை வற்புறுத்துவதற்காக மோடி புலம்பெயர்ந்தோர் மத்தியில் தனது தொடர்புகளை செயல்படுத்தினார் என்று புத்தகம் கூறுகிறது.
ஆனால் மாறாக, குஜராத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா, சோதனையை நடத்தியதற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் முடிவால் வருத்தப்பட்டார். புத்தகத்தின் படி, ஷா மிகவும் கோபமடைந்தார், அவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். “மரியாதைக்குரிய வாஜ்பாய்ஜி, விளம்பரத்திற்கான உங்கள் பேராசை காரணமாக நீங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரைஇழந்துவிட்டீர்கள்”என கூறி இருந்தார் குழப்பமடைந்த வாஜ்பாய் அவரை டெல்லிக்கு வரவழைத்தார்.
பின்னர் அமித் ஷா விளக்கினார் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது நான் அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். மொரார்ஜி அணு ஆயுதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் மொரார்ஜி என்னிடம் சொன்னார், நாங்கள் இருவரும் [அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்] அணுசக்தி சக்திகளாக மாறினால், போரின் மூலம் ஒருபோதும் வெல்ல முடியாது,என கூறியதாக என்று புத்தகம் கூறுகிறது.