செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
திரையரங்கு திறக்கப்படாத கொரோனா காலத்தில் ஓ.டி.டி.யில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை விட திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடப்படும் என அந்த படத்தின் நிறுவனம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
தடையை மீறி தி.மு.க. பிரசாரம்
கொரோனா ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சட்டத்தை மதிக்காமல் தடையை மீறி பிரசாரத்தை நடத்துகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் வரும்போது மக்களை சந்திப்பது எப்படி அ.தி.மு.க.வுக்கு தெரியும். கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் முடங்கிவிடாமல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். ஆனால் வீட்டிற்குள் முடங்கியவர் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என தி.மு.க.விடம் வெறி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வெறி ஒருநாளும் பயன்படாது. சட்டத்தை மீறுகின்ற செயலை தி.மு.க. செய்கிறது. நடிகர் ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அரசியலுக்கு வருவது, வராதது அவருடைய விருப்பம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என வளர்க்கப்பட்ட கட்சியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவரது உடம்பில் ரத்தத்தில் ஊறியது. அதனால் தான் இயற்கையாக தன்னையும் மீறி தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என கூறியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.புதுக்கோட்டை,
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
திரையரங்கு திறக்கப்படாத கொரோனா காலத்தில் ஓ.டி.டி.யில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம், அதன்பிறகு நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் வெளியானது. திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ஓ.டி.டி.யில் படங்கள் வெளியாவதை விட திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடப்படும் என அந்த படத்தின் நிறுவனம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
தடையை மீறி தி.மு.க. பிரசாரம் கொரோனா ஊரடங்கு இன்னும் முடிவடையவில்லை. சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. சட்டத்தை மதிக்காமல் தடையை மீறி பிரசாரத்தை நடத்துகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் வரும்போது மக்களை சந்திப்பது எப்படி அ.தி.மு.க.வுக்கு தெரியும். கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் முடங்கிவிடாமல் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். ஆனால் வீட்டிற்குள் முடங்கியவர் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என தி.மு.க.விடம் வெறி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வெறி ஒருநாளும் பயன்படாது. சட்டத்தை மீறுகின்ற செயலை தி.மு.க. செய்கிறது. நடிகர் ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அரசியலுக்கு வருவது, வராதது அவருடைய விருப்பம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என வளர்க்கப்பட்ட கட்சியில் இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவரது உடம்பில் ரத்தத்தில் ஊறியது. அதனால் தான் இயற்கையாக தன்னையும் மீறி தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என கூறியிருக்கிறார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.