01. உங்கள் வெற்றியை தடுத்து நிறுத்துவது எது தெரியுமா..? நீங்கள் செய்ய விரும்பும் காரியம் உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டதென நீங்கள் சிந்திக்கும் போதுதான்.
02. நாம் ஒரு காரியத்தை செய்ய முன்னரே அதை அடக்கியாழும் சக்திகள் அதைவிட வேகமாக எம் முன்னால் வந்துவிடுகின்றன.
03. முன்னேற அதிர்ஸ்டம் வேண்டும், பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்பதெல்லாம் பொய்யான காரணங்கள்.
04. என்றோ ஒரு நாள் வாய்ப்பு வரும் அது என் கதவை தட்டுமென்று காத்துக்கிடக்காதே அப்படி எதுவும் வராது, நீ முயற்சிக்காவிட்டால்.
05. நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றை உங்களால் செய்ய முடியாது என்று கருதுகின்ற மக்கள் வெற்றி பெறாத மக்கள்.
06. உங்களால் சாதிக்க முடியாது என்று உங்களை நம்ப வைக்கும் மக்களுக்கு எதிராக எப்போதுமே ஒரு தற்பாதுகாப்பை ஏற்படுத்துங்கள்.
07. உங்களால் வெற்றி பெற முடியும் என்ற உங்கள் தன்னம்பிக்கை சிந்தனையை உங்கள் எதிரிகள் ஒரு போதும் அழிக்க அனுமதிக்க வேண்டாம்.
08. பொறாமை கொண்ட மனிதர்கள் தாங்கள் முன்னேறாமல் இருப்பதால் உங்களையும் முன்னேற விடாது தடுக்கின்றனர்.
09. நீங்கள் யாருடன் நெருங்கிய உறவு வைத்துள்ளீர்களோ அவர்களை கொண்டுதான் மக்கள் உங்களை எடை போடுகிறார்கள்.
10. நாம் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் நமது சிந்தனையில் நேரடியாக தாக்கம் விளைவிக்கிறார்கள். எனவே சரியானவர்களுடன் நட்பாக இருங்கள்.
11. எதிர்மறை சிந்தனையாளர் உங்களை தாழ்ந்த நிலைக்கு இழுப்பதை ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம்.
12. எப்போதும் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் மக்களுடன் சேர்ந்தியங்குங்கள்.
13. அறிவுள்ளவர்களின் அறிவுரையை நாடுவதை ஒரு வழக்கமாக கொள்ளுங்கள்.
14. வெற்றிகரமான மக்களை நேரடியாக சந்திக்க முடியாது என்று எண்ண வேண்டாம்.
15. வெற்றி பெற்ற மக்கள் பணிவுள்ளவர்களாகவும் மற்றவருக்கு உதவக்கூடியவராகவுமே உள்ளனர்.
16. வெற்றி பெறாதவர்கள் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பதில்லை.17. உங்கள் மனதில் கேள்விகள் எழுந்தால் அவற்றுக்கான விடைகளை தெரிந்து கொள்ள வெற்றியாளர்களை நாடி செல்லுங்கள்.
18. ஒரு தோல்வியாளரிடம் தீர்வு தேடிப்போவது புற்று நோய்க்கு சிகிச்சை பெற போலி வைத்தியரிடம் போவது போன்ற வேலை.
19. வேலை நேரத்திற்கு மேலே ஒருவருக்கு வெற்றிகர வாழ்க்கை அமைந்திருந்தால் சலிப்பான வாழ்க்கை வாழும் ஒருவரைவிட அவர் மேலானவர்.
20. மிகப்பெரிய விளைச்சல் வேண்டும் என்றால் மிகச்சிறந்த உரம் போடப்பட வேண்டும்.
21. எங்களுக்கு விரும்பிய ஆர்வம் உள்ள மக்களுடன் மட்டுமே பழகினால் ஒரு நாள் நாங்கள் புதை குழிக்குள் சிக்கிவிடுவோம்.
22. புதிய சூழலுடன் பழகுங்கள் ஒரே குழுவுடன் பழகி உங்களை மட்டுப்படுத்த வேண்டாம்.
23. புதிய நண்பர்களை உருவாக்குங்கள் புதிய அமைப்புக்களில் சேருங்கள்.
24. எப்போதுமே ஒரு விடயத்தில் இரண்டு பக்கங்களையும் பாருங்கள்.
25. பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களுடன் பழகுங்கள்.
அலைகள் பழமொழிகள் 03.12.2020
தொடர்ந்தும் வரும்..