வரும் 31ல் புதிய கட்சி தொடக்க விழா குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31-ம் தேதி அறிவிப்பு என டுவிட்டரில் அறிவித்தார். தொடர்ந்து அளித்த பேட்டியில்
தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் என புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்துகிறார். இதுவரை 47,520 பூத் கமிட்டிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்க விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி,
மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.