ரஷ்யா தான் தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் போடத் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்று ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.