தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசு இல்லை !

உலகின் மிகப் பெரும் அமெரிக்க தொழில்நுட்ப சேவை வழங்குனரான, Google நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அதன் பயனர்களுக்கு பல்வேறு சேவைத் தடங்கல் ஏற்பட்டதற்கு அமைய, சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, Gmail யிலில் Google Contacts மற்றும், YouTube, Google Docs, blogger ஆகியவற்றை அணுகும்போது பல்வேறு தடங்கலுக்கு, பயனர்கள் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இது தொடர்பில் Google நிறுவனம் தனது சேவைகளை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
——-
தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசாங்கம் இல்லை. காரணம் 156 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பலம் பொருந்திய அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது. நாங்கள் நாளை வெளியேறினால் அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் மட்டக்களப்பிலே உள்ளார்கள். ஆனால் எமக்குக் கிடைத்த வாக்குகள் 33 ஆயிரம் வாக்குகள்தான். கிழக்கு மாகாணத்திற்கும், ஒரு இராஜாங்க அமைச்சர் போதாது. மக்களின் தேவைகளை நாடிபிடித்துப் பர்த்துக் கொடுப்பவன்தான் மக்கள் தலைவனாக இருக்க முடியும். பலர் தற்போது தமிழர்களின் கல்லறைகளில் ஏறிநின்று வீரவசனம் பேசுகின்றார்கள். விடுதலைப் போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சொல்கூட நான் கொச்சைப்படுத்திப் பேசவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான மகளிர் மகாநாடு மட்டக்களப்பு பெரியபோரதீவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திராகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ச.காந்தரூபி மற்றும் பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.மக்களை மக்கள் தலைவர்கள் பிழையாக வழிநடாத்தக்கூடாது. மக்கள் தலைவர்கள் கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்களாக இருத்தல் வேண்டும். தற்போது இந்த மாகாணத்திலே 58.9 வீதமாக இருந்த தமிழ் சமூகம் 38.6 வீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த மாகாணத்திலே வளங்கள் ரீதியாக ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது முன்னேற்றகரம் அடையாத சமூகமாக நாம் காணப்படுகின்றோம். இந்நிலையில் அரசியல் ரீதிகாகவும் ஏனைய சமூகத்திற்கு இணையாக நாங்கள் உருவாக வேண்டும். தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அதற்கு தீர்வு என்ன? தமிழர்களுக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தேவை. ஆனால் அதனை அடைவதற்கு நாங்கள் எதைக் கையில் எடுத்திருக்கின்றோம். கடந்த நான்கரை வருடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை பாதுகாத்தது. அதன்மூலமாக தமிழ் மக்களுக்கான எந்த விடயத்தையும் அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் மரணித்தவர்களின் கனவை நனவாக்க தற்போது யாரும் முயற்சிப்பதில்லை. மாறாக அவ்வாறு மரணித்தவர்களை வைத்து அரசியல் செய்கின்றார்கள். வடக்கு, கிழக்கிலே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தவர்கள் உள்ளார்கள். மட்டக்களப்பில் மாத்திரம் 36000 பேர் உள்ளார்கள், 8000 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள்.

பெண்களைத் தெய்வமாக வழிபடுகின்ற தமிழ் சமூகம், தற்போது தமிழ் பெண்கள் கடைகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், கையேந்தி நிற்கின்றார்கள்.

இந்த நாட்டின் 53 ஆயிரம் போர் மத்திய கிழக்கு நாடுகளிலே இங்கு மீண்டும் வரமுடியாமல் இருக்கின்றார்கள். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்திடம் தலைகுனிந்து நிற்பது வேதனைக்குரிய விடயமாகும். இதனை மாற்ற வேண்டும். எனவே தமிழ் சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்ற உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Related posts