என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என்றும், நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் சத்யராஜ் அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.
சினிமாவில் வில்லன், குண சித்திர நடிகர், ஹீரோ ஆகிய அடையாளங்கள் நடிகர் சத்யராஜுக்கு உண்டு.
ஆனால் நிஜத்தில் சத்யராஜை உற்று பார்த்தவர்களுக்கு தெரியும் அவர், ஒரு சாதி – மத மறுப்பாளர், கடவுள் மறுப்பாளர், பெரியாரிய சிந்தனையாளர். பல்வேறு கூட்டங்களில் அனல் பறக்க பேசியிருக்கிறார்.
இந்த அரசியல் தெறிக்கும் பேச்சு வரும் சட்டமன்றத்தேர்தல் பிரசார களத்தில் ஓங்கி ஒலிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் பக்கபலமாக இருப்பேன் என்றும், நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் சத்யராஜ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
பெரியாரின் தீவிர தொண்டர் சத்யராஜ் என்பதால் அது சார்ந்த அரசியல் கட்சியை மகள் திவ்யா தேர்ந்து எடுப்பார் என கூறப்படுகிறது.
மகளுக்காக சத்யராஜ் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் எதிராக பிரசாரம் செய்வாரா என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.