கிழக்கில் தொடரும் மழை, வெள்ளம்; மக்கள் பாதிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை என நீதிமன்ற கட்டளைச் சேவகரால் அறிக்கையிட்டதை ஆராய்ந்த மன்று, அந்த முகவரியில் பிரதிவாதிகள் காணும் வகையில் அறிவித்தலை ஒட்டுமாறு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்ட போதே யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், இந்த உத்தரவை வழங்கியது.

——

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை , அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள முள்ளிப்பொத்தானை பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வடிகான்களிலும் நீர் நிரம்பி வழிந்தூம் காணப்படுகின்றன.
தம்பலகாமம் பிரதேச சபைக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள ஹிஜ்ரா நகர் முதலாம் இரண்டாம் குறுக்கு ஜாமியா நகர், புஹாரிநகர் பாடசாலை, ஹமீதியா நகர், முஹம்மதியா நகர் , சதாம் நகர், தங்க நகர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கிராம மக்கள், குறிப்பாக நளாந்த கூலித்தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் கிண்ணியா திருகோணமலை கடற்கரையோரங்களில் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகின்றது.
நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இருந்து அம்பாரை மாவட்ட மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் தமது தொழில்களை ஆரம்பிக்க ஆயத்தமாகினர். இந்நிலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை மீண்டுமொரு முறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் குடலை பருவத்தை அடைந்த நிலையில் மழையின்றி சில பகுதிகளில் வேளாண்மை கருகும் நிலையினை அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழை வீழ்ச்சி பல விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள போதிலும், மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பி சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் பெய்து வரும் அடை மழையால் தாழ்நிலை பகுதிகளில் உள்ள பல இருப்பிடங்கள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சில அரச திணைக்களங்கள் உள்ளேயும் நீர் உட்புகுந்துள்ள சந்தர்ப்பங்கள் உள்ளபோதிலும் இதுவரையில் யாரும் இடம்பெறவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாழ்நிலப்பிரதேசங்களில் வாழும் மக்களது கோரிக்கைக்கு அமைய கடலுடன் இணையும் ஆலையடிவேம்பு சின்னமுகத்தவாரம் பகுதி நீர்வடிந்தோடுவதன் பொருட்டு அகழ்ந்து விடுவதற்கான ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றது.

—–

Related posts