கொரோனா வைரஸ் காரணமாக உள் வருகைக்காக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
ரஷ்யாவின் மொஸ்கோவ் நகரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் குழுவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருகின்றனர்.
எனினும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதென கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமான சேவை யான ஏரோப்லொட் விமான சேவையின் விமானம் ஒன்றில் அந்த நாட்டைச் சேர்ந்த 200 சுற்றுலா பயணிகளே இலங்கை வருகின்றனர்.
எனினும் ஐரோ ப்பா முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபினால் விமான பயணங்களை இரத்து செய்துள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.எனினும் 200 ரஷ்ய பயணிகளும் மேலும் சில நாட்களின் பின்னர் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
—-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் 41பேர் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 18 முதல் இவ்வாறு மேற்கொண்ட சோதனையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்புத் தெரிவிக்காமல் அதற்கு ஒத்துழைக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது சட்ட நடிவக்கை எடுக்கப்படும் எனவும அவர் தெரிவித்தார்.
இதேவேளை, புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ஒரு சிலர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக தெரிவித்த அஜித் ரோஹண, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, குறிப்பாக அட்டுலுகம பிரதேசத்தில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் PCR சோதனையின்போது, தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்குமாறு அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு தகவல்களை பிழையாக வழங்குவோருக்கு எதிராக, ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவண தயாரிப்பு சட்டங்களின் அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.