ஜனவரி 13ம் தேதி நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த்நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் இன்று திடீர் என சந்தித்தார். தியேட்டர்களில் பாரவையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது, படம் தயாராகி 10 மாதங்கள் ஆகியும் ஓ.டி.டி.யில் வெளியிடாமல் இருந்ததற்கு விஜய்க்கு நன்றி என கூறி உள்ளார்.மேலும் படத்தயாரிப்பாளர் அதிகாரப் பூர்வமாக தெரிவித்ததாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறி உள்ளார்.